அம்பாறையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சிறுமி மற்றும் பாட்டி பலி

அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான 4 வயது சிறுமி மற்றும் சிறுமியின் பாட்டி உயிாிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை கடையொன்றிற்கு சென்று வீடு திரும்பியபோதே அவர்கள் இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளதாகவும், வறட்சி காரணமாக நீரை தேடி யானைகள் கிராமங்களை நோக்கி பிரவேசிப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யானையின் தாக்குதலுக்கு பலியானவர்கள் அம்பாறை சுஹதகம பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.