வௌிநாட்டிற்கு சென்று திரும்புவோரால் நோய் பரவும் அபாயம்!

நாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் பிரிவு மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வௌிநாட்டிற்கு சென்று திரும்புவோரால் மலேரியா நோய் பரவுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது மலேரியா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

கடந்த வாரத்தில் மாத்திரம் மலேரியா நோயாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவ்வருடத்தில் இதுவரை 28 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் காணப்படுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.