ஐ.எஸ்.ஐ.எஸ் உதவிய காத்தான்குடி வர்த்தகர் விளக்க மறியலில்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை பேணினார் என குற்றச்சாட்டப்பட்ட, 30 வயதான மட்டக்களப்பு காத்தான்குடியைச் அஹமது மொஹமட் அர்சாத் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில், நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பிலான நீதவான் விசாரணைகளின் போது, முன்கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்களம், குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது