தந்தை கனடாவில் - யாழில் மகன் செய்த மோசமான காரியம்

யாழ்ப்பாணத்தில் ஐஃபோன் ஒன்றிற்காக இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞனின் தந்தை கனடாவில் வசித்து வரும் நிலையில் 10 வருடங்களுக்குப் பின் அண்மையில் அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இநிலையில் அவர் அங்கு வரும் போது ஐஃபோன் ஒன்று கொண்டு வருமாறு தந்தையிடம் இளைஞன் கூறியிருந்தார்.

எனினும் தந்தை ஐஃபோன் கொண்டு வராத நிலையில் இளைஞன் கோபத்தில் தனது கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதன்போது அருகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட போதும், சிறு காயம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.