யாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன?

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டி, துன்னாலைப் பகுதிகளில் கறுப்பு நிற ஆட்டோ ஒன்று மர்மமான முறையில் திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு குறித்த ஆட்டோ சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

NP ABI-9942 என்ற இலக்கமுடைய குறித்த ஆட்டோவை செலுத்தும் நபர் முஸ்லீம் நபர் போல் தோற்றம் கொண்டுள்ளதாக கூறிய பிரதேசவாசிகள் அதன் நடவடிக்கைகளில் மர்மம் நிலவுவதாகவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஆட்டோ மாலை வேளைகளில் செல்லும்போது அதன் பின் பகுதியை பொதுமக்கள் எவரும் பார்க்காமல் இருப்பதற்காக மறைத்தே வீதியில் செல்வதாகவும் ஆட்டோவின் உள்ளே யார் இருக்கின்றார்கள் என தெரியாதபடி அந்த ஆட்டோ மர்மமான முறையில் நடமாடித்திரிவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த ஆட்டோவில் விபச்சாரிகள் அல்லது கஞ்சா, போதைப்பொருட்கள் கொண்டு செல்லாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதோடு குறித்த ஆட்டோ துன்னாலைப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்தவுடன் அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அந்த வீட்டின் பாரிய கதவை மூடிவிடுகின்றதாகவும் இதனால் அந்த வீட்டுக்குள் என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக பொலிசார் மற்றும் ஆட்டோச்சாரதிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.