யாழில் பரபரப்பு -பிரபல கல்லுாாி அதிபா் கைது ..?

யாழ்.இந்து கல்லுாாி அதிபா் மாணவா் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப் பு ஆணைக்குழுவினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளாா்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின் விசேட அதிகாாிகள் குழு அதிபரை கைது செய்துள்ளது.

பாடசாலை மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகளை முன்னெடுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, பாடசாலையின் அதிபரை இன்று கைது செய்தது.

இதேவேளை யாழ்.இந்து கல்லுாாி அதிபருடன், மேலும் சில பாடசாலை அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.