குச்சவெளியில் பாரசூட்டில் பறந்த இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இராணுவ கொமாண்டோ படை சிப்பாய் ஒருவா் விபத்தில் உயிாிழந்துள்ளாா்.

அங்கு இடம்பெற்ற பாரசூட் அணிவகுப்பின்போது குறித்த இராணுவ வீரர் குச்சவெளி கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாடல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மேலும் காலி-ஹவுபே-மாவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ கமாண்டோ வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரர் கனேமுல்ல 4 வது கமாண்டோ பிரவில் பணியாற்றி வந்தவரெனெவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.