குருநாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டு - மகிந்த தரப்பு உருவாக்கியதாக பரபரப்பு தகவல்

குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை பொதுஜன பெரமுனவினரே உருவாக்கியதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி அலி சப்ரி தனது உத்தியோகப்பூர்வ வலைத்தள் பக்கத்தில் உரையாடல் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.

இதில் மருத்துவர் சாஃபி யின் போலி செய்தியை பொதுஜன பெரமுனவே முதன்முறையாக உருவாக்கியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குருநாகல் மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை மற்றும் அந்த நிதியூடாக சொத்துகளை கொள்வனவு செய்தமை, பிரதேசத்தில் காணப்படும் அமைதியற்ற நிலைமையில் இனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர் தொடர்ந்தும் இடம்பெற்ற விசாரணைகளின்போது, சந்தேகநபர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது முறையற்ற வகையில் பணம் சம்பாதிக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இருப்பினும் கருக்கலைப்பிற்கான சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, முறையற்ற வகையில் நிதி சேகரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து க்ஷாபி வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் வைத்தியர் க்ஷாபி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தம்மை கைது செய்தமை தொடர்பில் ஆட்சேபித்து அவர் தாக்கல் செய்திருந்த மனு மீதான பரிசீலனை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.