பள்ளத்தில் பாய்ந்த பாடசாலை பேருந்து- 28 பேரின் நிலை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியிலே இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பாடசாலைகளில் கல்விப்பயிலும் பொகவந்தலாவ பிரதேச மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை பேருந்தே இவ்வாறு பாதையை விட்டு விலகி 15 பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 18 மாணவர்கள் உட்பட 28 பேர் சிறுகாயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிகபடுகின்றது.

மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.