வவுனியா முகாமிலிருந்து வெளியேறிய வெளிநாட்டு அகதிகள்

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் நீர்கொழும்பிற்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர், நீர்கொழும்பு பகுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு அகதிகள் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர்.

இதையடுத்து குறித்த அகதிகள் 113பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் ஒரு தொகுதியினர் சுயவிருப்பின் பேரில் நீர்கொழும்பு முகாமிற்கு திரும்பி சென்றுள்ளனர்.

அதன் பின்னர் ஐவர் மாத்திரமே பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கி இருந்த நிலையில், அவர்களும் இன்று காலை நீர்கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புனர்வாழ்வு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வவுனியாவில் குறித்த அகதிகளை தங்கவைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.