அருவாக்காட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை

அருவாக்காட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அருவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் அப்பகுதியை சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தாங்கி வலுவான கொங்கிரீட்டினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மீதேன் வாயு காரணமாக வெடிப்பு ஏற்பட முடியாது என அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விசாரணை நடவடிக்கைகளுக்கு மத்தியில் கழிவு பிரிவின் செயற்பாடுகள் தடங்கலின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.