முள்ளியவளை மாணவன் கவிர்சனின் திடீர் முடிவு- சோகத்தில் குடும்பம்

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

18 வயதான யோகேஸ்வரன் கவிர்சன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் மாணவன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் சற்று நேரத்தில் வீட்டில் தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சிறு வயது முதல் தந்தை இன்றி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த குறித்த மாணவன் உயிரை மாய்ப்பதற்கு முன்பாக தாயாருக்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவனின் உயிரிழப்பிற்கான காரணம் எதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.