தண்டவாளத்தில் ஓடிய மனைவியையும் மகனையும் காப்பாற்ற முனைந்த 27 வயதான ஜோஹான் பரிதாபமாக பலி

ரயில் தண்டவாளத்தில் ஓடிய மகனை காப்பாற்றுவதற்காக சென்ற மனைவியையும், மகனையும் காப்பாற்றிவிட்டு தந்தை ஒருவர் உயிாிழந்த சோகம் திருகோணமலை மட்கோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலை-அபயபுர, ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த 27 வயதான என் ஜோஹான் ஜோசப் என தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் குழந்தை ரயில் தண்டவாளத்திற்கு சென்றபோது மகனை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

அச்சமயம் ரயில் வருவதை அவதானித்த குறித்த குடும்பஸ்தர் , மகனையும் மனைவியையும் காப்பாற்றுவதற்காக சென்ற கணவர் ரயிலி மோதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.