மீண்டும் விடுதலைப்புலிகளின் தங்கம் தேடிய படையினர்..!

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தங்கம் , ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையில் இன்றையதினமும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திலேயே இவாறு அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவம் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கபடுகின்றது.

இதேவேளை கடந்தவாரமும் குறித்த பகுதியில் இரண்டு தடவை அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் இன்றையதினம் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.