யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கோலாகலமாக திறந்துவைப்பு..! படங்கள் இணைப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், அமைச்சர்கள் அர்ஜூண ரணதுங்க, அஜித் ரூபசிங்க, ரவி கருணாநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கைக்கான இந்திய இந்தியத் தூதர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.