கைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? பகீர் வாக்குமூலம்

கொள்ளுப்பிட்டியில் கடந்த சில தினங்களின் முன்னர் பொலிசாரால் விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து அழகிகளின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபா என விசாரணைகளில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது

கைது செய்யப்பட்ட அழகிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தி, பொலிசார் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வவுனியா, யாழ்ப்பாணம் வரை அவை எட்டிப்பார்த்த நிலையில் அவரை இல்லாமலாக்கப்பட்டன. எனினும் , ஓரிரண்டு இயங்குவதாக அரசல்புரசலான தகவலுண்டு.

இந்தநிலையில், கொள்ளுப்பிட்டியிலுள்ள மசாஜ் நிலையமொன்றை அண்மையில் பொலிசார் சுற்றிவளைத்தனர். மசாஜ் நிலையமென்ற போர்வையில் இயங்கிவந்த அந்த விபச்சார விடுதியில் கைதான அழகிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில காலமாகவே இயங்கி வரும் அந்த விடுதியில் சுமார் 25 தாய்லாந்து அழகிகள் பணிபுரிகின்றனர்.

வாடிக்கையாளர்களின் வரவை பொறுத்து அவர்கள் விடுதியில் தங்கியிருப்பார்கள்என்றும், சராசரியாக ஒவ்வொரு அழகியும் நாளாந்தம் 100,000 ரூபா சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த மசாஜ் நிலையத்தில் , முகாமையாளரான சிங்களப் பெண்ணும், இரண்டு தாய்லாந்து அழகிகளும் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவதினத்தில், மாறுவேடமிட்டு அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாய்லாந்து அழகியொருவர் வரவேற்றுள்ளார். தொழிலதிபரின் தேவை குறித்து அழகி விசாரித்தபோது ,தாய்லாந்து யுவதியொருவரிடம் மசாஜ் செய்யவிரும்புவதாக பொலிஸ்காரர் குறிப்பிட்டார்.

மசாஜ் கட்டணமாக 6,000 ரூபா அறவிடப்படும் என்றும், அழகிகளை வாடிக்கையாளரே தேர்வு செய்யலாமென்றும் வரவேற்பாளர் குறிப்பிட்டபோது, பணத்தை செலுத்திய தொழிலதிபர், அழகியொருவரின் படத்தை தேர்வு செய்து, அவருடன் அறையொன்றிற்குள் சென்றார்.

அந்த தாய்லாந்து அழகிக்கு ஆங்கிலம், சிங்களம் தெரியாது. எனினும், தனக்கு தெரிந்த ஓரிண்டு வார்த்தைகளில் மசாஜ் தவிர்ந்த வேறு சேவைகள் தேவைப்பட்டால் 10,000 ரூபா செலுத்தி பெற்றுக்கொள்ளலாமென தெரிவித்தார்.

இதன்போது, தனது கையடக்க தொலைபேசியில் இருந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியபோது வெளியில் சிவில் உடையில் நின்ற பொலிசார், அதிரடியாக விடுதிக்குள் நுழைந்து , தொழிலதிபருடன் இருந்த தாய்லாந்து அழகியும், முகாமையாளரான சிங்களப் பெண்ணையும் கைது செய்திருந்தனர்.

இதேவேளை சுற்றுலா விசாவில் இலங்கை வந்த தாய்லாந்து அழகிகளே இவ்வாறு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், மசாஜ் விடுதிக்குள் நுழைவுக்கட்டணமாக 6,000 ரூபா செலுத்த வேண்டியதும், தாய்லாந்து அழகிகளுடன் உல்லாசமாக இருக்க 30,000 ரூபா செலுத்த வேண்டுமென்பதும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது