பாடசாலைக்குள் நுழைந்த கஜேந்திரர்கள்- மாணவர்களிற்கு கட்டாய துண்டு பிரசுரம் விநியோகம்

யாழில் பல இடங்களில் இன்று ஜனாதிபதி தோ்தலை புறக்கணிக்குமாறுகோாி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த துண்டு பிரசுரங்களை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினா் இன்று காலை வழங்கியுள்ளனர்.

இதன்போது அவர்கள் யாழ் பாடசாலை ஒன்றினுள் நுழைந்து கட்டாய துண்டு பிரசுரங்களை மாணவர்களிடம் விநியோகித்துள்ளனர்.

இந்நிலையில் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்குவதில் தவறில்லை எனவும், ஆனால் ஏதுமறியாத மாணவர்களிடம் இவ்வாறு கட்டாய துண்டு பிரசுரங்களை வழங்குவது முறையற்ற செயல் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பல சட்டத்தரணிகளை கொண்ட ஒரு கட்சிக்கு பாடசாலை பிள்ளைகளிடம் இவ்வாறு அத்து மீறி கட்டாய துண்டுப்பிரசுரங்களை வழங்குவது முறையற்றது என்பது தெரியாதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.