இந்தியாவின் கர்மா - இலங்கையையும் தாக்கியதா?

கொழும்பு நகரில் வளி மாசடைந்து இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 5ம் திகதி தெரிவித்துள்ளது.

அவர்களிடம் உள்ள காற்றின் தர அளவீடுகளின் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையின் படி கொழும்பு நகரில் காற்றின் தரக் குறியீடு (AQI) 163 அலகுகளாக இருந்த நிலையில் நேற்று 172 ஆக உயர்ந்தது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் AQI அலகுகள் 150 களைத் தாண்டுவது ஒரு தீவிர வளி மாசுபாடு ஆகும், என்பதோடு இது சாதாரண மக்களில் கூட சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில் இந்தியாவில் புதுடெல்லியை பாதித்துள்ள வாளிமாசடைதலினால் எற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த திணைக்களத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி தெரிவிக்கையில்,

நாட்டில் காற்று 2 மடங்காக மாசடைந்திருப்பதாகவும், கியுபிக் மீற்றருக்க 50 மைக்றோ கிராம் ஆக சமனான வகையில் உள்ள காற்றில் சிறிய அளவிலான துகள்கள் இன்று பிற்பகல் அளவில் 70 மைக்றோ கிராம் ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேபோன்று இந்த நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காற்று வீசும் திசை மாற்றமடைவதனால் இந்தியாவில் இருந்து இந்த தூசியுடனான மேகம் இலங்கை திசைக்கு வந்திருப்பதாகவும், தற்பொழுது நிலவும் வளிமண்டலம் மாசடைவதனால் சுவாச நோயுடன் கூடிய நபர்கள், சிறுவர்கள் மற்றும் வயதானோர் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் சரத் பிரேமசறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை கொழும்பு நகரில் வளி மாசடைந்ததால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளும், பிள்ளைகளும் இதுதொடர் பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தேசிய இடர்காப்பு முகாமைத்துவ நிலையததின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இத்தகையோர் களைப்பைத் தரக்கூடிய வேலைகளைத் தவிர்ப்பது நல்லதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வளியில் துகள்கள் மற்றும பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், அது வீழ்ச்சி கண்டு வருவதாகவும் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.