யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தின் பணிகள் இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து சோதனை விமானசேவை ஒன் று இன்று நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சிவில் விமானசேவைகள் அதிகாரசபை மேற் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

அதற்கமைய இரத்மலானை விமான நிலையத்தில் இன்று பயணிக்கும் விமானம் ஒன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

அதன்பின்னர் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணித்து, மீண்டும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய இன்றைய தினம் வர்த்தக விமான பயணங்கள் மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளை முதல் வர்த்தக விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் சிவில் விமான அதிகாரசபை தெரிவித்துள்ளது.