வவுனியா வைத்தியசாலையில் நபரொருவரின் செயல் - கையும் களவுமாக சிக்கினார்!

வவுனியா வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை உடைத்து திருட முற்பட்ட நபர் ஒருவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்களால் பிடிக்கபட்ட குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த மோட்டார்சைக்கிளின் பெட்டியை உடைத்து அதில் திருடுவதற்கு குறித்த சந்தேக நபர் முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை கையும் மெய்யுமாக பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக் தெரியவருகின்றது.