நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

மரக்கறிகளின் விலையானது எதிர்வரும் நாட்களில் தற்போதிலும் பார்க்க இன்னும் அதிகரிக்கக்கூடுமென பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் மரக்கறிகளை வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் நாட்டில் பெய்யும் கன மழை காரணமாக மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை மக்களை கவலையடையச் செய்துள்ளது.