பெரமுனவின் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி!

பொதுஜன பெரமுனவினால் ஹேமதகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற யுவதியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாகவும்க் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 23 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரச்சார கூட்டத்திற்கு சென்ற மனைவி, மகள் வீடு திரும்பாததையடுத்து, ஹேமதகம பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய பொலிசார், இளைஞனை கைது செய்துள்ளனர்.

பிரச்சார கூட்டத்தின் பின்னர் பேருந்தில் வீடு திரும்பிய சமயத்திலேயே குறித்த யுவதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.