யாழ்.நகாில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிக்கு நேர்ந்தசோகம்!

யாழ்.நகாில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாணவி ஒருவரை பாம்பு தீண்டியுள்ளது.

இந் நிலையில் குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் காலையில் இடம்பெற்ற சிரமதானத்தின்போதே மாணவி பாம்புக் கடிக்கு இலக்கானபோதும் சுமார் இரண்டு மணி நேரங்களின் பின்னர் மாணவியிடம் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார்.

இதனையடுத்தே மாணவி பாம்பு கடிக்கு இலக்கானமை கண்டறியப்பட்டது.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்போது பாதிப்பின்றி உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.