கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற மிகப் பெரும் கொடூரம்! இளம் குடும்ப பெண் வெட்டி கொலை

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2ஆம் வாய்க்காலில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 29 வயதான அன்ரன் ஜெயராஜ் மேரி அகிலா எனும் இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் தொழில் நிமித்தம் வவுனியா சென்றிருந்த வேளை வீட்டில் குழந்தையுடன் இருந்த சமயம் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில், நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணையின் பின்னரே மேலதிக தகவல்கள் வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.