கிளிநொச்சியில் இளம் குடும்ப பெண் திட்டமிட்டு படுகொலை! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்றைய தினம் 10 மாத குழந்தையின் தாய் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் உயிரிழந்த பெண்ணின் கணவன் மற்றும் மை த்துனன் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் தன் குழந்தையுடன் வீட்டில் தனிமையிலிருந்த நிலையில் குரூரமாக வெட் டிக் கொலை செய்யப்பட்டிருந்தாா்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கருணாமூர்த்தி வினோத் தலைமையிலான பொலிஸ் குழு தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர்.

அதன் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் வவுனியாவில் மற்றுமொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ள நிலையில் , குடும்பத்தில் சீதனம் தொடர்பாக பிரச்சினையும் காணப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியை கொலை செய்ய 10 இலட்சம் பணம் தருவதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தனது மனைவியின் சகோதரியின் கணவரிடம் கூறியதையடுத்து, சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பணத்திற்காக குறித்த நபர் அந்த இளம் குடும்பப் பெண்ணை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கைதான சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் , உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி