T.M.V.P கட்சியின் முக்கிய அறிவித்தல்! அதிர்ச்சியில் பிள்ளையான்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் வவுணதீவு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் திரு.பாக்கியரஜா கோபிநாதன் மற்றும் கட்சியின் உப தலைவர் திரு.யோகவேள் ஆகியோர் ஜனாதிபதி தேர்தல் , வாக்களிப்பு தொடர்பாக முக்கிய செய்தி ஒன்றை விடுத்துள்ளனர்.

T.M.V.P கட்சியின் தற்போதைய செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்து, கட்சி செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்கும் கட்சின் படுவான்கரை இளைஞர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க T.M.V.P கட்சியின் இளைஞர் அணித்தலைவர் திரு.பாக்கியரஜா கோபிநாதன் மற்றும் கட்சியின் உப தலைவர் திரு.யோகவேள் ஆகியோரின் தலைமையில் கலந்தாய்வு இக்கூட்டம் ஒன்று நேற்று கொத்தியாபுலையில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தற்போதைய தலைவர்கள் என்று தம்மை சித்தரித்து செயற்படும் பிரசாந்தன் மற்றும் செல்வி மனோகர் என்போரது செயற்பாடுகள் தம்மை அதிருப்தி அடைய வைத்துள்ளதாகவும் இதனால் தாம் கட்சி செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பதாகவும் கட்சியின் இளைஞர்கள் தெரிவித்தனர்.

பிள்ளையானால் உருவாக்கப்பட்டு மிகவும் திறமையான முறையில் வழி நாடாத்திச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (T.M.V.P) ,இன்று ஒரு சிலரின் கீழ்த்தரமான தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு நலிவடைந்துள்ளதை ஏற்றுக்கொண்ட T.M.V.P கட்சியின் இளைஞர் அணித்தலைவர் திரு.பாக்கியரஜா கோபிநாதன் மற்றும் கட்சியின் உப தலைவர் திரு.யோகவேள் ஆகியோர் இனிமேலும் அவ்வாறு கட்சியை கொண்டு செல்ல முடியாது என தெரிவித்தனர்.

அத்துடன் பொது மக்களுக்கான நிதிகளை கொள்ளையடித்து சொத்து சேர்த்ததோடு தானும் தனது அடியாட்களும் மது, மாதுக்கு அடிமையாகி தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனை கூட்டுச் சேர்ந்ததன் மூலம் தமது கட்சியும் கிழக்கு மக்களிடையே செல்வாக்கிழந்து போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் செயட்பாடுகளிலும் எந்த செல்வாக்கும் இல்லாத வியாளேந்திரன் அணிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு கீழ் தமது ஆதரவாளர்கள் அடிமைகள் போல் நாடாத்தப்படுவதாகவும் இளைஞர் அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வியாளேந்திரன் அணி கோடிகளை பெற்றுக் கொண்டு சொகுசு வாகனங்களில் பவனி வர தாம் சோற்று பார்சலுக்கும் சாராயத்துக்கும் வந்தவர்கள் போல் நாடத்தப்பட்டதகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தம்மில் அநேகமானோர் போராளி,மாவீரர் குடும்பங்களில் உள்ளவர்கள் என்றும் தமது சொந்த சகோதர சகோதரிகளையும் தம் இனத்தையும் கொன்றொழித்த கோத்தபாயவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி முடிவெடுத்தமை பாரிய தவறு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக தமது குடும்பத்தவர்களினதும் கிராம மக்களினதும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவற்றுக்கு காரணம் பிரசாந்தன் மற்றும் செல்வி மனோகர் தான் என கூறிய இளைஞர்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை தாம் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதன்போது கருத்து தெரிவித்த T.M.V.P கட்சியின் இளைஞர் அணித்தலைவர் திரு.பாக்கியரஜா கோபிநாதன் , கட்சியின் தற்போதைய போக்கு மற்றும் கட்சி தொண்டர்களின் மனநிலை பற்றி விரைவில் பிள்ளையானிடம் விரைவில் அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் தமது ஆதரவாளர்களை , எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கமாறு சொல்லுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இந்த தீர்மானம் தொடர்பாக இளைஞர் அணித்தலைவர் திரு.பாக்கியரஜா கோபிநாதன் மற்றும் கட்சியின் உப தலைவர் திரு.யோகவேள் ஆகியோரால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.