நாட்டின் புதிய ஜனாதிபதியிடம் குமார் சங்ககார விடுத்துள்ள கோரிக்கை

நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ச நாட்டில்வாழும் மூவின மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பான வாழ்க்கை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால், இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது என்றும், அனைத்து இலங்கையர்களையும் உண்மையாக ஒன்றிணைக்கும் பார்வையும், வல்லமையும் பெறவும், நாட்டிலுள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் செழிப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் வாழ்த்துகின்றேன் எனவும் குமார் சங்ககார தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.