கோத்தபாயவின் வெற்றிவிழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிய நால்வருக்கு நேர்ந்த கதி!

இன்றையதினம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷபதவியேற்றுள்ள நிலையில் பதுளையில் நடைபெற்ற வெற்றி விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய கார் ஒன்று பாதையை விட்டுவிலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் பதுளை இ.போ.ச பஸ் சாரதியான 48 வயது நிரம்பிய நிமல் திசாநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த ஏனைய மூவர் கடும் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த விபத்து தொடர்பில் பதுளை பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.