கணவன், மனைவி தகராறால் பற்றி எரிந்த வீடு - உடமைகள் சேதம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகி புரம் பகுதியில் வீடு ஒன்று அடையாளந்தெரியாத நபர்களால் நேற்றிரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த பகுதியில் கணவன், மனைவிக்கு இடையில் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்து வந்த வீடே விசமிகளால் தீ வைகக்பப்ட்டுள்ளது.

இதில் வீட்டின் பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், உடமைகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.