விசுவமடு பகுதியில் கிணற்றில் வீழ்ந்த பெண்! இராணுவம் செய்த உதவி

கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கிணற்றிற்குள் விழுந்த குடும்பப் பெண்ணொருவரை இராணுவத்தினர் மீட்டு காப்பாற்றியுள்ளனர்.

விசுவமடு தொட்டியடி பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ஆழமான கிணற்றிற்குள் 51 வயதான குடும்பப் பெண்ணொருவர் விழுந்து விட்டதாக பிரதேசவாசிகள், அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு சென்ற இராணுவத்தினர் அப் பெண்ணை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

தொட்டியடியில் அமைந்துள்ள 6வது சிங்க ரெஜிமெண்ட் சிப்பாய்களே குறித்த பெண்ணை காப்பாற்றினர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம்தேறி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.