ஜனாதிபதி தேர்தலின் பின்னர் காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதுவகையான மாற்றமொன்று ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.

இதுவரை காத்தான்குடியில், மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர், ஹெல்மட் பயன்படுத்துவதில்லை.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அதுதொடர்பிலான கவனத்தை செலுத்தியுள்ளனர்.

நீண்டகாலமாகவே அவர்கள், ஹெல்மட் அணிந்து செல்லாத நிலையிலேயே, அங்குள்ளவர்கள் புதிதாக ஹெல்மட்டுகளை கொள்வனவு செய்து, அங்குள்ளவர்கள் அணியத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை காத்தான்குடியில் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரை, போக்குவரத்து பொலிஸாரினால் கூட கட்டுப்படுத்த முடியாத காலமொன்று இருந்ததாக பிரதேசவாசிகள் பலரும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.