கொக்குவில் பகுதியில் ரவுடிகளை விட மோசமாக நடந்து கொள்ளும் பொலிஸார்!

கொக்குவில்- பொற்பதி வீதியில் பொலிஸார் , ரவுடிகளை விட மோசமாக நடந்து கொள்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் நேற்றி இரவு நின்றிருந்த பொலிசார் விக்கெட்டுகள், கம்பிகள், வயா்களுடன் நின்று பொதுமக்களின் முகங்களுக்கு டோா்ச்லைட் வெளிச்சத்தை பாய்ச்சி சோதனை நடாத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பொற்பதிச் சந்தியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆறு பேரே இவ்வாறு நடந்துகொண்டுள்லதாகவும் கூறப்படுகின்றது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை காரணமாக வீதியால் பயணிப்போர் அச்சத்துடன் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இருட்டான பகுதியில் நின்று திடீரென வந்து வீதியில் பயணிப்போரின் முகத்திற்குபொலிஸார் ரோச் அடித்ததனால் சிலர் நிலைகுலைந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் சிலர் பொலிஸாருடன் முரண்பட்டதை அவதானிக்க முடிந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் ரௌடிகளின் நடமாட்டம் உள்லதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.