தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பரீட்சை சென்ற தனயன் !திருமலையில் நிகழ்ந்த துயர சம்பவம் !

திருமலையில் 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.டீ.சமிந்த லசந்த என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர், சமிந்த லசந்தவின் சடலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இன்றைய தினம் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படியானதொரு சூழ்நிலையில் உயிரிழந்த நபரின் மூத்த மகனான சுபுன் தனன்ஞச (16 வயது) இன்றைய தினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தார்.

இதன்போது, அவர் பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் தந்தையின் சடலத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்பு பரீட்சை எழுதுவதற்காக மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.