உணவக உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்- கொக்குவிலில் சம்பவம்

கொக்குவில் ஆடியபாதம் வீதியில் வைத்து உணவக உரிமையாளர் ஒருவர்மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆடியபாதம் வீதி ரயில் கடவைக்கு அருகில் உள்ள உணவக உரிமையாளரே இவ்வறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் உணவகத்திற்குச் சென்று கொண்டிருந்த குறித்த உணவக உரிமையாளரை மேட்டார் சைக்கிலில் துரத்தி சென்றவர்கள் அவரை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு முச்சக்கர வண்டியை விட்டு பாய்ந்த ஓடிய அவரை அந்த கும்பல் துரத்திச் சென்ற போது , அவர் அங்குள்ள வீடொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதனையடுத்து அவருடைய முச்சக்கர வண்டியை அடித்து நொருக்கிய கும்பல், முச்சக்கர வண்டியை வீதிக்கு அருகில் இருந்த வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டு சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.