பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்கள் வழங்க ஜனாதிபதி உத்தரவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தினை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்தவிடயம் மாவட்ட செயலாளர்களுக்கும் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வர்த்தமானி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நிலவும் மழையுடனான காலநிலையினால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒன்றிணைந்து இடர் நிலமைகளை தடுப்பதற்கும் உடனடியான நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் குறிப்பிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மகிந்தராஜபக்க்ஷவின் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.