சற்றுமுன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து- மூவர் பலி! மூவரின் நிலை?

சற்று முன்னர் அம்பலாங்கொடை ஊறுவத்த பகுதியில் ஓட்டோ மற்றும் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தாய் மற்றும் மகள் உட்பட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவையில் இருந்து அம்பலாங்கொட நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.