காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பிக்குனி!

நாவுல –நாலந்த, போகஸ் போபொல்ல விகாரையை சேர்ந்த பிக்குணி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில்,அவரின் இறுதி சடங்கின் போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது .

இதனையடுத்து நாவுல பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மெலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பிக்குணியின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சென்றிருந்த நிலையில், பிரதேசவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே பிக்குணியின் இறுதிச் சடங்கின் போது பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.