கோர விபத்தில் சிக்கிய கல்முனை வேன்! 9 பேரின் நிலை

ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகன சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.