கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு போடப்பட்ட விவகாரம் -விசாரணைகள் ஆரம்பம்

வெள்ளை வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்துறை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 10ம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித தலைமையில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வாகன தகவல்களை இருவர் வெளியிட்டனர்.

வெள்ளை வான் சாரதி மற்றும் கடத்தப்பட்டவர் என குறிப்பிடப்பட்ட இருவரே அந்த தகவல்களை வெளியிட்டனர்.

அந்தோனி டக்ளஸ் பெர்னாண்டோ மற்றும் அத்துல சஞ்சய மதனாயக ஆகிய இருவரே வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்ட தகவலை கூறி இருந்தனர்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை தாம் தொடங்கியுள்ளதாக சிஐடியினர் தலைமை நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, பத்திரிகையாளர் சந்திப்பின்போது எடுக்கபட்ட திருத்தப்படாத வீடியோ பதிவை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிஐடியினர் நாளை மறுநாள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றது.