பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற அமர்வில் அமர்வில் நகரசபை தலைவர் இருதயராஜாவினால் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது வரவு செலவு திட்டம் குறித்த விவாதம் நடத்தப்படவில்லை என்றும் , உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்படவில்லையெனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தின.

எனினும், அதை ஏற்றுக்கொள்ளாத தலைவர் வாக்கெடுப்பிற்கு கோரியபோது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5, உதயசூரியன் 1, சுயேட்சை 1 ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக 8 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6, ஈ.பி.டி.பி 2 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதன்படி மேலதிக 1 வாக்கினால் பருத்தித்துறை நகரசபையின் தோற்கடிக்கப்பட்டது. .