பாதுகாப்புச் செயலாளர் கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது!

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாதென்று, பாதுகாப்புச் செயலாளர் கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லையெனவும், மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதுள்ள பிரச்சினையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்புகளைக் காரணங்காட்டி, தொடர்ந்து பொதுமக்களின் காணிகளை படையினர் அபகரித்து வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், சிவஞானம் கூறியுள்ளார்.

இதேவேளை , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடு சரியோ, பிழையோ ஆனால், அவர்கள்தான் மக்களுடைய பிரதிநிதிகளெனவும், சிவஞானம் இதன்போது மேலும்தெரிவித்துள்ளார்.