புத்தளம் மாவட்டத்தில் 5,535 பேர் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1,634 குடும்பங்களைச் சேர்ந்த 5,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 138 குடும்பங்களைச் சேர்ந்த 470 பேரும் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 686 குடும்பங்களைச் சேர்ந்த 2068 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 757 குடும்பங்களைச் சேர்ந்த 2625 பேரும் நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், மகாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.