வீதி வளைவை உடன் அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நுழையும் பகுதியில் வளைவு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த வீதி வளைவை உடன் அகற்றுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பயணத்தினை முடித்துக்கொண்டு கொழும்புக்கு வரும் வழியில் ஜனாதிபதி இந்த வளைவை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து , குறித்த வளைவை அகற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த வளைவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.