அரை சொகுசு பஸ் சேவை -விரைவில் ரத்து

அரை சொகுசு பஸ் சேவையை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுமார் 10 ஆயிரம் பயணிகளை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில், நூறு சதவீதமான பயணிகளும், அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் இது பொதுமக்களுக்கு எந்த வசதிகளையும் வழங்காத நிலையில், சாதாரண பஸ்களில் பயணிப்பதை விட அதிக செலவாகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பஸ்களில் ஒளிப்பரப்படும் பாடல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் மற்றும் பொது போக்குவரத்து பஸ்களுக்கு தரமான பாடல்களைக் கொண்ட இறுவட்டுக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரை செகுசு (SEMI LUXURY) பஸ் சேவை என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையிடும் குறித்த சேவை குறுகிய காலத்துக்குள் முழுமையாக இரத்துச்செய்ய இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.