யாழிற்கு கனரக வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டது என்ன..? மக்கள் மத்தியில் கேள்வி!

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் நேற்று மாலை கனரக வாகனங்களில் பாரிய இயந்திரங்களின் பாகங்களை ஒத்த பொருட்களை யாழிற்கு எடுத்து செல்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

இந்த பொருட்கள் எதற்கு என தெரியாத நிலையில் மக்கள் அதனை வியப்புடன் பார்த்ததோடு சிலர் அது என்ன பொருட்கள் என ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது அவை யாழ்ப்பாணத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட உபகரணங்கள் என தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாகவும் கூறப்படுகின்றது .