இது பௌத்த நாடு -யாழில் கமால் குணரட்ண முழக்கம்!

இலங்கை பௌத்த நாடு என்றும் ,இங்குள்ள அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது படையினரின் கடமை எனவும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார்.

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் முக்கிய பங்களிப்பு ஆற்றவேண்டி உள்ளதாக குறிப்பிட்ட அவர், முஸ்லீம் தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் எனவும் இதன்போது பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.