காத்தான்குடி நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 61பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி வரையில் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியாவிலுள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த உத்தரவினை நீதிபதி பிறப்பித்தார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த 64பேரில் ஏற்கனவே மூவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.