மன்னாரில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலி

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்ட வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பி.சீ. பியரத்தின கடந்த ஞாயிறு மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துடன்குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடு முறையில் சென்ற அனுராதபுரம் தளாவ பகுதியை சேர்ந்த 28 வயதான எஸ்.ரத்னாயக்க என்ற பொலிஸ் அதிகாரியும் நேற்று அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனரா? எனப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.