அம்பாறையில் தைப் பொங்கலை கொண்டாடத் தயாராகும் தமிழ் மக்கள்!

இந்து மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை நாளைய தினம் கொண்டாடுவதற்கு அம்பாறை மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.

அதற்காக கல்முனை பாண்டிருப்பு உள்ளிட்ட சந்தை பகுதியில் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலாவது தைப்பொங்கல் பண்டிகை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தயாராகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை நாட்டின் பலபாகங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன் தமிழ் மக்கள் அனைவரும் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.