நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தமிழர் திருநாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டிடமான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது தலமூர்த்திகளுக்கான அபிசேகத்துடன் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றபோது பாதுகாப்புக்காக பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.